23 வயதுடைய இளைஞன் கொரொனாவால் மரணம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கோவிட் -19 நோயால் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொடை – பேலியகொடை கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளார்.

முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். அவர் நீரிழிவு நோயாளி எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 970 பேர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 186 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர்.