மேல் மாகணத்தில் மேலும் 199 பொலிஸாருக்கு கொரோனா தொற்று

மேல் மாகாணத்தில் புதிதாக 199 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்- 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,350 ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.