வாக்குகளை எண்ணுவதை நிறுத்துங்கள் – டுவிட்டரில் டிரம்ப்

வாக்குகளை எண்ணுவதை நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். எண்ணுவதை நிறுத்துங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது இன்னமும் உறுதியாகாத நிலையில் டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தன்று அளிக்கப்பட்ட அனைத்து வாக்குகளையும் எண்ணப்போவதாக தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தங்கள் மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்படுவது நேர்மையான விதத்தில் இடம்பெறுகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்குகள் எண்ணப்படுவது தற்போது நிறுத்தப்பட்டால் ஜோபைடன் வெற்றிபெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.