ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடரவேண்டும்- ஜனாதிபதி உத்தரவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீக்கப்படும்போது முகக்கவசங்களை அணிதல் சமூகவிலக்கலை பேணுதல் போன்றவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவேண்டு;ம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் கடுமையான விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் 31457 குடும்பங்களை சேர்ந்த 84,000 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாணத்தில் 13911 குடும்பங்களை தனிமைப்படுத்தலிற்காக அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் இடங்களை தொடர்பிலிருந்தவர்களை ஆராய்ந்த பின்னர் தேவைப்பட்டால் அந்த பகுதியை தனிமைப்படுத்துமாறு அதிகாரிகளிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.