வேகமாகப் பதவிலரும் கொரோனா வைரஸ் – ஒரே தினத்தில் ஐந்து மரணங்கள் பதவி

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஐந்து பேர் பலியாகி இருப்பதாக நேற்றைய தினம் சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் தொகை 29 ஆக அதிகரித்திருக்கிறது.

இலங்கையில் கொரோனா பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் அதிகளவானவர்கள் மரணமடைந்திருப்பது இருதான் முதன்முறையாகும்.

மரணமடைந்தவர்களின் விபரங்கள் வருமாறு;

  1. 46 வயதான ஆண் – கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர். மருத்துவமனையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். நீண்டகாலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்
  2. 68 வயதான பெண் – வெல்லாம்பிட்டியைச் சேர்ந்தவர். கொழும்பு தேசிய வைத்தியசலையில் மரணம். நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டவர்.
  3. 58 வயதான பெண் – கொழும்பு 12 இல் உள்ள வீட்டில் மரணமடைந்துள்ளார். அவருக்கு இருதய நோய் இருந்துள்ளது. கொரோனா காரணமாக அது மோசமடைந்துள்ளது.
  4. 73 வயதான பெண்மணி – கிரான்டபாஸ் பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்துள்ளார். சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர். கொரோனாவினால் அது மோசமடைந்தது.
  5. 74 வயதான ஆண். கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர். வீட்டில் மரணமடைந்திருக்கின்றார். இருதய பாதிப்பு கொரோனாவினால் மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.