கிரான்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 16 பேருக்கு கொரோனா

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனைவரையும் தங்களின் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.