பிரான்சில் கொரோனா; அதிகரித்து வரும் நச்சுயிரித் தாக்கம் – ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கு உட்படும்வரை உள்ளிருப்பு நடவடிக்கை தொடரும் என்று அறிவித்திருந்தார்.

இப்பொழுது சராசரியாக நாள்தோறும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனால் சில கடுமையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகின்றது.

நேற்று புதன்கிழமை 24 மணி நேரத்தில்38 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் 394 பேர் கொரோனா தொற்றால் வைத்தியசாலைகளில் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 37 ஆயிரத்து 674 பேர் பிரான்சில் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.

நேற்று மட்டும் அன்று 3681பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தமாக பிரான்சில் covid-19 தொற்றுநோய் காரணமாக 19 ஆயிரத்து 540 பேர் தற்பொழுது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் 4 ஆயிரத்து 89 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

3042 இடங்கள் கொரோனா தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதாரத் திணைக்களம் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.