நீதி, நியாயம் இருந்தால் நிச்சயம் விடுதலை செய்யப்படுவேன்; பாராளுமன்றத்தில் ரிஷாத்

”என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்களாகும். எனவே, இந்த நாட்டில் நீதி, நியாயம் இருந்தால் நிச்சயம் விடுதலை செய்யப்படுவேன்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“நான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை. மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். எனவே, இறைவன் நீதியை பெற்றுக்கொடுப்பார். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தாருங்கள்.நான் இறந்தால்கூட என்னையும் எரிப்பார்கள். எனவே, அரசாங்கம் முடிவை மீள்பரி சீலனை செய்யவேண்டும்” என்றார்.