மற்றுமொரு பாராளுமன்றச் செய்தியாளருக்கும் கொரோனா

பாராளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் மற்றுமொருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர் ‘மவ்பிம’ பத்திரிகையைச் சேர்ந்தவராவார்.