நேற்று மட்டும் 409 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று மட்டும் 409 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 132 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படுபவர்கள் 5 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை – பேலியகொடை கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து 8 ஆயிரத்து 276 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 11 ஆயிரத்து 744பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.