அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று; ட்ரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் போட்டி

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலானது இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் (Joe Biden) களமிறங்கியுள்ளனர்.

இத் தேர்தலில் வெற்றி பெறுபவர், வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார்.

தேர்தல் தினம் இன்று தான் என்றாலும் பல மாகாணங்களில் ஏற்கனவே, வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

அந்தவகையில் முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் பிடனை ஆதரிக்கும் ஜனநாயக கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நேரடி வாக்குப்பதிவில் ட்ரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.