பாடசாலைகள் அடுத்த வாரம் திறக்கப்படாது – கொரோனா பரவலால் அரசு முடிவு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.