கொழும்பில் 35 கட்டங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றம் – கொழும்பு மேயர் தகவல்

கம்பஹா மாவட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தையும் கொரோனா வைரஸ் மிரட்டி வருவதால் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான சுமார் 35 கட்டடங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்துக்குள் மட்டும் கடந்த 8 நாள்களில் 1,150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.