வடமராட்சி தொற்றாளர்கள் மூவர் பொலநறுவைக்கு அனுப்பப்பட்டனர்

வடமராட்சியில் தொற்று உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்கள் மூவரும் நேற்றைய தினம் பொலநறுவை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

வடமராட்சியின் இராஜ கிராமம், பருத்தித்துறை, பொலிகண்டி பிரதேசங்களை சேர்ந்த தொற்றாளர்களே இவ்வாறு பொலநறுவைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தொற்றாளர்கள் மூவரையும் பொலநறுவை சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னரே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.