யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிசிஆர் சோதனைகளின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேலணை, நல்லூர், உடுவில் பகுதிகளை சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலணை ஊர்காவற்துறை பகுதியில் மூவரும்,நல்லூர் பகுதியில் ஒருவருக்கும் உடுவில் பகுதியில் தாய்மகள் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.