பிரான்ஸில் இஸ்லாமிய தீவிரவாதி நடத்திய கத்திக்குத்துத் தாக்குதல்; 3 பேர் பலி

பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரான்ஸின் கடற்கரை நகரமான நீஸ் நகரின் நொத்தடாம் தேவாலயத்தில் நேற்று காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் தேவாலய காவலர் மற்றும் இரு பெண்கள் கொல்லப்பட்டனர். இதன்போது பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு மரணமானார் என்று நீஸ் நகரப் பொலிஸார் தெரிவித்தனர்.

‘தாக்குதலை நடத்தியவர் ‘அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டவாறு தாக்குதலை நடத்தினார். பொலிஸார் தாக்குதல் நடத்தி அவரின் கொலைவெறிச் செயலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

காயமடைந்த நபர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்”, என்று நீஸ் நகரின் மேயர் கிறிஸ்ரியன் எஸ்ட்ரோசி தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு நீஸ் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது.

இதேவேளை, 2016 ஜூலை 14 ஆம் நாள் ஒன்று துனிசியர் ஒருவர் ட்ரக் வகை வாக னத்தை மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஓட்டிச் சென்று உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்தச் சம்பவத்தில் 86 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.