வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவு; ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

கொரோனா அச்சம் காரணமாக அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் உள்ள அரசஊழியர்களும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களில் உள்ள அரச நிறுவனங்களில் பணியாற்று பவர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.