இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது; நேற்று 355 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்றும் 355 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 111 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 75 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதேவேளை, 19 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.