இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா; நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் நேற்று மட்டும் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டும் நாட்டில் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நேற்று மாத்திரம் 500 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றார்.