சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவிவான மொசாட்டின் ஆய்வு கூடத்தில்

இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான “மொசாட்”, சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை “ஆய்வுக்காக” கொண்டு வந்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற பின்னர் நவம்பர் முதலாம் திகதி பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் மனித சோதனைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:

“திரைக்குப் பின்னால் பல இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய குடிமக்களுக்கு விரைவில் ஒரு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் முயற்சிக்கிறோம்” என்றார்.

இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.பி.ஆர்) மார்ச் மாதத்தில் அதன் தடுப்பூசி சோதனைகளை விலங்குகளில் தொடங்கியது. இதன் அடுத்த கட்டமாக 80 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இரண்டாவது கட்டம், டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 960 பேர் கலந்து கொள்வார்கள். இதில் வெற்றி பெற்றால் 30,000 தன்னார்வலர்களில் பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.