இலங்கை வந்தடைந்தார் பொம்பியோ – நாளை முக்கியமான பேச்சுக்கள்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ கொழும்பு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில்,சீனாவிற்கு எதிராக, இலங்கை அமெரிக்காவுடன் இணைவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கே மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என முன்னாள் இராஜதந்திரி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து மைக்பொம்பியோ முன்னர் அறிவித்துள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய வெளிவிவகாரக்கொள்கையை அறிவித்த பின்னரே அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தமது சுற்றுப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர் என தமரா தெரிவித்துள்ளார்.