தனிமைப்படுத்தல் நடைமுறையில் புதிய மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய முதல் நிலை தொடர்பாளர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 3923 பேர் 32 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 527 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.