நேற்று மட்டும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் நேற்று 541 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலிய கொடை மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 464 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

16 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்தனர்.