யாழ்ப்பாணத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி; பேலியகொட சென்று வந்தவர்களாம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள கடலுணவு பதனிடும் நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் குருநகரைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டநிலையில் கொரோனா தொற்றுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரண்டு பேரும் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படவுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.