ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் பொம்பியோ; நாளை கொழும்பு வருகின்றார்

அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளை கொண்ட, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என மைக்பொம்பியோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.