20 ஐ ஆதரித்த இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி? அரச தரப்பு ஆராய்கிறது

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று செய்தி வெளியிட் டுள்ளது. 20ஆவது திருத்தத்துக்கு எதிரணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் ஏழு பேர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் யார் யாருக்கு எவ்வாறான பதவிகளைக் கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுவருகிறது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.