கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதன்; ரெலோவின் மத்திய செயற்குழு ஆராய்ந்தது

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மத்திய செயல்குழு கூட்டம் நேற்று முன்தினம் வவுனியாவில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன. ரெலோ கட்சியிலிருந்து வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை ஆரம்பித்துள்ள ந. சிறிகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் வகித்த பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவியை கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்குப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இதுதவிர கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.