தொற்று அபாய பகுதிகளுக்குச் சென்றுவரும் சுகாதார அதிகாரிகளுக்கு சுயதனிமைப்படுத்தல்

தொற்று அபாய பகுதிகளுக்கு சென்று வரும் சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மேல் மாகாண உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்கோ அல்லது பி.சி.ஆர். பரிசோதனைக்கோ உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அதன் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும், “இந்த விவகாகரம் குறித்து இன்றையதினம் விசேட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு சென்று வருவோர் கட்டாயமாகப் பதிவை மேற்கொண்ட பின்னரே சென்றுவர வேண்டும். அவ்வாறு அபாய இடங்களுக்கு சென்று வருவோர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னரே தொடர்ச்சியாக கடமையாற்ற அனுமதிக்கப்படுவார்கள்” என்றும் கூறினார்.