64 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு; கம்பஹாவில் இன்று வங்கிகள் திறக்கப்படும்

இலங்கையில் 64 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தனிமைப் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்னும் அமுல் உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், கொழு ம்பு மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 5 மணிக்கு களுத்துறை மாவட்டத்திலுள்ள பேருவள பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்படவிருந்தது, ஆனால் குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடரும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந் திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் அனைத்து வங்கி கிளை களும் இன்று திறந்திருக்கும் என சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார்.