பாராளுமன்றம் மீண்டும் நவம்பர் 3 ஆம் திகதி கூடுகின்றது

பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கூடும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் கடந்த 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான 4 நாட்கள் பாராளுமன்றம் கூடியது. 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் இடம்பெற்று அரசால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் அது நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடியபோது கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் சபை அமர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதிலும் சபை அமர்வுகள் அரசால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையிலேயே நவம்பர் மாதத்துக்கான பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன சபையில் நேற்றுவெள்ளிக்கிழமை அறிவித்தார்.