’20’ க்கு ஆதரவாகப வாக்களித்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்; சஜித் அணி தீர்மானம்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலிருந்து விலக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“கட்சியின் நேற்றைய கூட்டத்தில் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் பாராளுமன்றக் குழுவிலிருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கக்கூடாது எனக் கட்சியின் ஒருமித்த முடிவையும் மீறி அதற்கு ஆதரவாக வாக்களித்து 20ஆவது திருத்தம் நிறைவேறுவதற்கு உதவிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக கட்சியின் பாராளுமன்றக் குழுவிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.