நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 368 பேர் அடையாளம் காணப்பட்டனர்

நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 368 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.

மேலும் திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4050 ஆக உயர்ந்துள்ளது.

அதன் படி தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 521 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந் தவர்களின் மொத்த எண்ணிக்கை 3ஆயிரத்து 714 ஆகவும், தற்போது நாட்டின் 27 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 3ஆயிரத்து 792 ஆகவும் உள் ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது