ஊரடங்கு குறித்த தவறான தகவல் அரச ஊடகத்தின் முகநூலில் வெளியானது எப்படி? விசாரணைக்கு உத்தரவு

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரச ஊடகமொன்றின் முகநூலில் வெளியான செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் தலைவரை உடனடியாக இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஊடகத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு என வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.

அரசஊடகமொன்றின் இணையத்தளத்திலும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் பரவிய செய்திகள் காரணமாக வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளில் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டிருந்தது