சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவதில்லை; பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு

சீனாவிடமிருந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வாங்கப் போவதில்லை என்று பிரேஸில் ஜனாதிபதி போல்சனோரா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் இது வரை 4 கோடியே 18 இலட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். 11 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

கொரோனா பாதிப்பில் தென்னமெரிக்க நாடான பிரேஸிலில் 53 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உலகின் பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி காட்டி வருகின்றன.

சீனாவிடமிருந்து 4 கோட்டியே 60 இலட்சம் டோஸ் மருந்தை சீனாவிடம் வாங்க பிரேஸில் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போது அந்த மருந்தை வாங்கப்போவ தில்லை என்று பிரேஸில் ஜனாதிபதி போல்சனோரா அறிவித்துள்ளார். அத்துடன் பிரேஸில் மக்கள் பரிசோதனைக்கானவர்கள் அல்லர் என்றும் அவர் கூறியுள்ளார்.