பொம்பியோவுக்கு பாதுகாப்பு; கொழும்பு வந்தது அமெரிக்க உயர் இராணுவக் குழு

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் கொழும்பு வந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனை தெரிவித்தது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் 16 பேர் உள்ளடங்கிய குழுவினர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஊடாக கடந்த 21ஆம் திகதி கொழும்பு வந்துள்ளனர்.