’20’ ஐ ஆதரித்த டயானாவுக்கு எதிராக நடவடிக்ககை ; ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்கின்றது

20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களித்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“20 இற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும், முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயகத்துக்கு சமாதி கட்டியுள்ளனர். பெண் பிரதிநிதி என்ற அடிப்படையிலேயே டயானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் ஒட்டுமொத்த பெண்களுக்கும் துரோகம் இழைத்து விட்டார்” என்றார்.

அதேவேளை, அரவிந்தகுமாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணி ஆராய்ந்து வருகின்றது.