மோசமடையும் இலங்கை நிலை; ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

இலங்கையில் ஒரே நாளில் 865 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 256 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 256 பேரில் 39 பேர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர்கள்.