கொரோனாவை ஒழிப்பதற்கு வாய்ப்பில்லையா? சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டன் விஞ்ஞானியின் கருத்து

“கொரோனா வைரஸை ஒழிக்க வாய்ப்பில்லை. இந்த வைரஸுடன்தான் நாம் எப்போதும் வாழ வேண்டியிருக்கும்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரிட்டன் அரச ஆலோசனை குழுவின் தலைமை விஞ்ஞானிஜோன் எட்மன்ஸ்.

கொரோனா தடுப்பூசிகளை எதிர்காலத்தில் அதிகளவு பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் நாம் அவற்றைக் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 6 கொரோனா தடுப்பூசி விநியோக ஒப்பந்தங்களில் பிரிட்டன் கையெழுத் திட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை 7 இலட்சத்து 89 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.