மணல் அகழ்ந்த ஆறு பேர் அதிரடிப்படையால் கைது

வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கரவெட்டி தில்லையம்பல பிள்ளையார் கோயில் பகுதயில் நேற்றுக் காலை 6 மணியளவில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, மணல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. வாகனம் ஒன்றையும், மூன்று டிப்பர்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதான நபர்களையும், வாகனங்களையும் நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.