20 ஆவது திருத்தம் 156 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றம்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஆதரவு

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

20வது திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வாக்களித்துள்ளனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நசீர் அஹமட், பைசல் ஹாசிம், எச்எம்எம் ஹாரீஸ், எம் எஸ் தௌபீக், முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்த குமார் ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.